2026 சட்டமன்ற தேர்தல் களம் புதுச்சேரியிலும் பரப்பாக உள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 9 தேதி நடக்கவிருக்கும் தேர்தல் பணிகள் தொடங்கியது. புதுச்சேரியில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியதையடுத்து வேட்பாளர்கள் விருப்ப மனு அளிக்க தொடங்கிவிட்டார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் இழுபறியாக இருக்கும் திமுக- விசிக கூட்டணி தொகுதி பங்கீடு இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கு விசிக தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கிறார். இந்நிலையில் புதுச்சேரியில் விசிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் . புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் மற்ற தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட முடிவு என அறிவித்துள்ளார். அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு போதுமான இடம் ஒதுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக கடந்த பல ஆண்டுகளாக சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது. கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்ட விசிக, 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்றது.
தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதுச்சேரி மாநிலத்தில் 3 தொகுதிகளை கோரியிருந்தது. காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு போதுமான இடம் ஒதுக்க முன்வரவில்லை மேலும் திமுக தரப்பில் இருந்து ஒரு தொகுதியை விசிக-வுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்த போதிலும் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் கூட இன்னும் உறுதியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து விசிக சார்பில் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று சென்னையில் நடந்த விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் எனவும், 2028 மாநிலங்களவை தேர்தலில் ஒரு எம்.பி சீட் கேட்டு பெற வேண்டும் என்றும் கேட்டு கொள்வதாக விசிக உறுப்பினர்கள் தீர்மானம் வைத்துள்ளனர். ஆனால் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் திமுக 8 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.