தமிழ்நாடு

அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்...!

Malaimurasu Seithigal TV

பரமக்குடியில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதிகோட்டை அரசு தொடக்கப்பள்ளியில், இன்று காலை உணவாக மாணவ, மாணவியர்களுக்கு சேமியா உப்புமா மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது. 

ஆனால் உணவு சாப்பிட்டதில், 9 மாணவ, மாணவியருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, வயிற்று வலியால் துடித்துள்ளனர். இவர்களை உடனடியாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த நிலையில் இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.