தமிழ்நாடு

கனமழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு!

தமிழகத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23.36 அடியாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tamil Selvi Selvakumar

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 23.36 அடியாக உயர்ந்துள்ளது.

ஏரியின் மொத்த கொள்ளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியிலிருந்து, 3 ஆயிரத்து 475 மில்லியன் கன அடியாகவும், நேற்று இரவு பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் காரணமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால், ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீரை நிறுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.