தமிழ்நாடு

உச்சநீதிமன்ற தீர்ப்பை தலை வணங்குவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பேட்டி!

Tamil Selvi Selvakumar

உச்சநீதிமன்ற தீர்ப்பை தலை வணங்குவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நாங்கள் தலைவணங்குவதாக கூறினார்.

ஏனென்றால், இந்த தீர்ப்பில் எங்களுக்கும் சில சாதகங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த தீர்ப்பில் என்ன கூறியிருக்கிறார்கள் என்று தெரியாமலே ஈபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருவதாக விமர்சித்துள்ளார்.