தமிழ்நாடு

பேரவையில் எதிரொலித்த விருத்தாசல சிறுமி விவகாரம்: யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை - முதலமைச்சர் உறுதி!

Tamil Selvi Selvakumar

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி, துரித நடவடிக்கை எடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். பள்ளியின் உரிமையாளர், விருத்தாலசம் நகராட்சி தி.மு.க. வார்டு உறுப்பினர் என்பது தெரிய வந்துள்ளது என்றும், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பி கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
 
இதையும் படிக்க : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...கலக்கத்தில் இல்லத்தரசிகள்!

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து, பள்ளி தாளாளர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்  தி.மு.க. வார்டு உறுப்பினர் என்று அறிந்ததும், கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார். தொடந்து பேசிய அவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், பாரபட்சம் இன்றி துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.