தமிழ்நாடு

திமுகவின் ஊழல்களை ஆதாரங்களுடன் மத்திய அரசுக்கு அனுப்புவோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியின் ஊழல்கள் தொடர்பான விபரங்களை மத்திய அரசுக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Suaif Arsath

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட பிநைிபந்தைனியன் பேரில் இராயபுரம் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தார்.

அப்பொது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், வரியை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி தான் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அரசு எதற்கு எனக் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு பொருளாதார மேதைகளை நியமித்து 300 நாட்கள் ஆகிறது.

ஆனால் பொருளாதார நடவடிக்கையை மீட்க எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை என விமர்சித்த ஜெயகுமார், வரியையும் உயர்த்தாமல் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது அதிமுக அரசு தான் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய ஜெயகுமார், மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது எனக் குற்றம் சாட்டினார்.