தமிழ்நாடு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததன் எதிரொலி...காரைக்காலில் மாஸ்க் அணிவது கட்டாயம்!

Tamil Selvi Selvakumar

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் காரைக்காலில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அண்மைக் காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில்  அரசு மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காரைக்கால்  மாவட்டத்தில் ஓராண்டுக்கு பிறகு, கடந்த மூன்று நாட்களில் 20-ம் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளளது