தமிழ்நாடு

அனைவரும் வருகை தருக : அதிமுக சார்பில் டிசம்பர் 19 தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் எம் மதமும் சம்மதம் என்கின்ற கொள்கை கொண்டவர்கள் அதேபோல எல்லா பண்டிகைகளையும் எல்லா மதத்தினரும் எல்லா கட்சியினரும் கொண்டாடுவது எழுதப்படாத விதியாகும்

Malaimurasu Seithigal TV

அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் இடைகால பொதுச்செயலாளர்  எடப்பாடி   தலைமையில்  வருகின்ற திங்கள் கிழமை டிசம்பர் 19  தேதி 5 மணியளவில் சென்னை வானகரம் கிறிஸ் துமஸ் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென் டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா  நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேராயர்கள் ஆயர்கள் போதகர்கள் தோழமை கிறிஸ்தவ தலைவர்கள் அருட்தந்தையார் அருட்சகோதரிகள் கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
 எனவே தலைமை கழக நிர்வாகிகள் மாவட்டக்கழக்ச்செயலாளர்கள் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கழக செய்தி தொடர்பாளர்கள்  கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு  கிறிஸ்துமஸ் கால அன்பைபகிர்ந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்  என எதிர்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.