தமிழ்நாடு

ஓபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வு என்ன?.. இன்று மாலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை!!

Suaif Arsath

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுக கட்சி விவகாரம்

கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் பறித்து உத்தரவிட்டார். இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் முற்றி, கட்சியினர் இரண்டாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்வார்பேட்டையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ஓ.பி.எஸ்

 இதனிடையே தொண்டர்களின் ஆதரவை திரட்ட திட்டமிட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டு தொண்டர்களை சந்தித்து வரும் அவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில்  மாலை ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.