தமிழ்நாடு

“அடுப்பூதும்  பெண்களுக்கு படிப்பு எதற்கு....” அமைச்சர் சேகர் பாபு!!!

Malaimurasu Seithigal TV

திமுக சார்பில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், நடிகை ராதிகா சரத்குமார் முன்னிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.  மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு மகளிர் தின சிறப்பாக புடவை பரிசாக  வழங்கப்பட்டது.

முன்னதாக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து மேடையில் உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு ”கோலம் போடும் பணி, சமையல் பணி, துணி துவைக்கும் பணி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பணி என பணிகள் பல இருந்தாலும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நடிகை ராதிகாவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மகளிர்கள் ஆர்வமுடன் வந்துள்ளார்கள்.” எனப் பேசியுள்ளார்.

மேலும், “ஒரு நாட்டில் மகளிருக்கு   உண்டான அனைத்து சுதந்திரங்களும் உரிமைகள்;  எந்த நாட்டில் இவை அனைத்தும் செயல்படுகிறதோ அந்த நாடு மிகப்பெரிய அளவில் உயரக்கூடிய நாடாக இருக்கும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “மகளிரின் ஒற்றுமைகளை, உறவுகளை நினைவு கூறும் வகையில் தான் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது.  ஒரு காலத்தில் சொல்வார்கள் அடுப்பூதும்  பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று, பெண்களை அடிமைப்படுத்தும் காலம் மாறி வங்கிகளுக்கு கூட பெண்களே செல்லும் ஒரு உரிமையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் அது தமிழகத்தின் வளர்ச்சி.  வாங்கிய கடனை அடைத்து, மேலும் 3400 கோடி ரூபாய் மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடனையும் வழங்கி உள்ளார் முதலமைச்சர். ” எனவும் கூறியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.