Trisha Thalapathy Vijay 
தமிழ்நாடு

விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் அப்படி என்ன தான் உறவு? ஏன் எப்போதும் த்ரிஷா குறிவைக்கப்படுகிறார்!?? இது என்னங்க நியாயம்?

அவர்கள் இருவருக்கும் என்ன உறவு என்பது யாருக்கும் தெரியுமா என்றுகூட தெரியவில்லை...

Saleth stephi graph

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாக மக்களையும் சந்தித்து வருகிறார் விஜய். 

விஜய் -ன் மக்கள் செல்வாக்கு!

விஜய் -க்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு. 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அவர் படங்களுக்கு சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிகராக இருப்பார்கள். இவர் அரசியலில் இணைந்த பிறகும், இவரின் ரசிகர்கள் இவரை அப்படியே பின் தொடர்கின்றனர். 

ஆனால் புகழ் வெளிச்சம் அதிகமாக பரவும் இடங்களில்தான் சர்ச்சையும் நிறைந்திருக்கும். அந்த வகையில் விஜயின் பொது வாழ்க்கையில் நீண்ட கால சர்ச்சையாக இருப்பது, திரிஷா மட்டும்தான். விஜய் -க்கு சங்கீதாவுடன் கடந்த 1999 - ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

2000 -களுக்கு பிறகு திரைக்கு வந்த திரிஷா மவுனம் பேசியதே படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

2004 -ஆம் ஆண்டு வெளியன் கில்லி படத்தில்தான், விஜய் -ம் திரிஷா -வும் முதன் முதலில் ஜோடி சேருகின்றனர். கில்லி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

மேலும் அந்த படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி வெகுவாக பேசப்பட்டது. ஆனால அதைத்தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி, தற்போது லியோ வரை இருவரும் சேர்ந்து நடித்த படங்களுக்கு எல்லாம் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

திருப்பாச்சி படத்திலிருந்தே விஜய் -கும் திரிஷாவிற்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுவெளியில்  இருவரும் ஒன்றாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் குருவி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியில் இருவரும் நடிக்காமல் இருந்தனர்.

பல வருட இடைவெளிக்கு பிறகு இருவரும் நடித்த படம்தான் ‘லியோ’.. லியோ -வில் இணைந்தபோது மீண்டும் இருவரை குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன. மேலும் விஜய் -ன் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு த்ரிஷா என்ன செய்தாலும், அதில் எங்கேனும் விஜய் -யை இழுத்துவிடலாமா என யோசிக்கும் அளவிற்கு சென்றுவிட்டனர், நெட்டிசன்கள்.

விஜய் -ன் பிறந்த நாளுக்கு திரிஷா வாழ்த்து தெரிவித்து, போஸ்ட் போட்டால் கூட அதை வைத்து கதை எழுத துவங்குகின்றனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் என்ன உறவு என்பது யாருக்கும் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. அவர்களுக்குள் எந்த மாதிரியான உறவு இருந்தாலும் அது விஜய் -ன் மனைவிக்கும, அவரது குழந்தைகளுக்கும் தான் பிரச்சனை. ஆனால் அவர்களே இதைப்பற்றி பொதுவெளியில் பேசுவது இல்லை. 

தவிர திரிஷா -வின் நிச்சயதார்த்தம் ஏற்கனவே முறிந்துவிட்டது, எதனால் முறிந்தது என சரியான காரணம் தெரியாவிட்டாலும், இதுபோன்ற ஆதாரமற்ற கிசுகிசுக்கள் அவரை பாதிக்க கூடும். நடிகைகள் பல ஆண்டுகளாக இதுபோன்ற கிசுகிசுக்களை சமாளித்து வந்தாலும், இதை ‘Normalise’ செய்வது தவறான போக்கு.

ஒரு முதிர்ச்சியடைந்த சமூகம் தனி நபருக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைப்பது ஏற்படுயது அல்ல.

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சில கட்சிக்காரர்கள் கூட அவரையும் திரிஷா -வையும் வைத்து விமர்சிகின்றனர், அவரின் அரசியல் பிடிக்கவில்லை என்றால், கொள்கையை, பேச்சை விமர்சிக்கலாம், தனிப்பட்ட வாழ்வியலை இழுத்து பேசுவதற்கு யாருக்குமே அதிகாரம் கிடையாது இப்படி , ஒரு தரம் தாழ்ந்த அரசியல் பழக்கம் மிக ஆபத்தானது.. தமிழகம் தனது நிலையை (standards), மனித உளவியல் தன்மையை உயர்த்திக்கொள்ள வேண்டும், அதுதான் நாகரீகம்,  


உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.