தமிழ்நாடு

ஆளாளுக்கு அரசியல் பேசும் போது, ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது? தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி!

Tamil Selvi Selvakumar

அரசியல்  தலைவர்கள் அரசியல் பேசும்போது ஆட்சித் தலைவர்களும் அரசியல் பேசலாம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், டிஐஜி விஜயகுமாரின் தற்கொலைக்கான தூண்டல் குறித்து விசாரிக்க வேண்டும் என்றவர், காவல் துறையினருக்கு சங்கம் இருந்தால் தான் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசியவர், ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்ற எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். ஆளுநர் பதவி என்பது போஸ்டர் ஒட்டி கண்டிக்கக் கூடிய பதவி அல்ல என்று கூறியவர், ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசியல் இல்லாமல் எதுவும் கிடையாது என்று கூறியவர், அரசியல் தலைவர்கள் அரசியல் பேசும்போது, ஆட்சி தலைவர்களும் அரசியல் பேசலாம் என்று தமிழிசை தெரிவித்தார்.