இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 46 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன்,கீழக்கரை மேம்பால பணி விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
போக்குவரத்து ஊழியர்கள ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுமா? என்பது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தின் மூலமாக போக்குவரத்துத் துறைக்கு 1358 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார்.