தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்தியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியது குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

 இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வெளிப்படைத்தன்மையோடு செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை கைவிட்டு, மக்களை காப்பாற்றும் பணியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு கடந்த இரண்டு மாதத்தில் மத்திய அரசால் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது. இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட வேண்டும் என்பதையும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.