தமிழ்நாடு

யாரெல்லாம் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்தலாம்?

பெண் பயணிகள் எந்த நேரமும் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்தலாம் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

பெண் பயணிகள் எந்த நேரமும் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்தலாம் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஊரடங்கிலும் அவ்வப்போது சிறு சிறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை புறநகர் ரெயில்களில் இன்று முதல் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம் என்றும், மேலும் ஆண் பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் புறநகர் ரெயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும், தெரிவித்துள்ளது. ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் முகக்கவசம் அணியாமல் யாராவது சிக்கினால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே கட்டுப்பாடு விதித்துள்ளது.