சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ,இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற துணை தலைவர் கொறடா பதவி யாருக்கு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மேலும் சசிகலா தொண்டர்களுடன் பேசுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.