தமிழ்நாடு

இந்தியாவின் இங்கிலாந்தில் யாருக்கு வெற்றி? முன்னிலைப் பெறுவது யார்? - மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

2026-ல் அதிமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 36 சதவீத வாக்குகளைப்

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் ஓசூர், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் முக்கிய நகரமாகும். கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில், அண்டை மாநில அரசியலின் தாக்கம் எப்போதும் இருந்து வருகிறது. தற்போதைய திமுக எம்எல்ஏ பிரகாஷின் செயல்பாடு சராசரியாக இருந்தாலும், 2026 தேர்தலில் புதிய வேட்பாளர்கள் களமிறங்குவது போட்டியை அதிகரித்துள்ளது.

ஓசூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 39.4 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 34.4 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஒக்கலிக கவுண்டர்கள் 22 சதவீதத்தோடு பெரும்பான்மை வகிக்கிறார்கள். ரெட்டியார்கள் 20 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 15 சதவீதமும் உள்ளனர். 59 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தொழில் பூங்காக்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு முதலிடத்தில் உள்ளன. காவேரி கூட்டு குடிநீர் திட்டம் மக்கள் தொகைக்கு ஏற்பப் போதுமானதாக இல்லை என்பது மக்களின் புகாராகும். பெங்களூரு எல்லை நகரம் என்பதால் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஓசூர் மக்களின் பெரும் கவலையாக உள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாதது மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் வசதிக் குறைபாடுகள் நீண்ட காலப் புகாராகும்.

ஓசூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 48 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 39.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 43 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 48.8 சதவீதமாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 130 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 142 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 107 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 101 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 30 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, ஓசூரில் திமுக 110 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 90 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 70 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.