தமிழ்நாடு

சார்பட்டா படத்தை விமர்சிப்பது ஏன்? - ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதிலடி

தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே, சார்பட்டா பரம்பரை படத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிப்பதாக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் விமர்சித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே, சார்பட்டா பரம்பரை படத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிப்பதாக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, திமுக அரசு கொரோனாவுடன் போராடி சுகாதாரத்துறை அதிகாரிகள் துணையுடன் 95 சதவீத கொரோனா பரவலை கட்டுப்படுத்தி உள்ளதாக  பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இயக்குனர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பட விவகாரத்தில் குரல் கொடுத்து, தான் இருப்பதாக காட்டிக் கொள்கிறார் என விமர்சித்தார்.