தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்க தடை விதிப்பது ஏன்?" - நல்லசாமி கேள்வி

Tamil Selvi Selvakumar

புதுச்சேரி, கர்நாடகாவில் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்க தடை விதிப்பது ஏன்? கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகையில் தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், கள் இறக்குமதியில் கலப்படம் நடைபெறும் என்றால், அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசால் முடியாதா என வினவினார். 

தொடர்ந்து பேசிய நல்லசாமி, கள் இறக்கி சந்தைப்படுத்த வலியுறுத்தி ஜனவரி 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உரிமை மீட்பு அறப்போர் நடைபெறும் என்றார்.

புதுச்சேரி, கர்நாடகாவில் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்க தடை விதிப்பது ஏன்? கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.