தமிழ்நாடு

அதிமுகவிற்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த மறுப்பு தெரிவிப்பது ஏன்?!!

Malaimurasu Seithigal TV

அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்துள்ள எதிர்கட்சித் துணைத்தலைவரை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயக படுகொலைதான் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்

எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பதை கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை கைது செய்த போலீசார் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அவர்களை வைத்துள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி,

தமிழக சட்டசபையில் 60 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை உள்ளடக்கி அதிமுக எதிர்கட்சியாக உள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் மூன்றும் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. அவை மூன்றும் ஒன்றின் மற்றொன்று அதிகாரங்களில் ஒன்று தலையிடுவதில்லை.

ஆளுங்கட்சியாக உள்ள திமுக மட்டும் நினைத்த உடனே இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடும்போது அதிமுகவிற்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியில்லையா. அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்துள்ள எதிர்கட்சித் துணைத்தலைவரை  சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயக படுகொலைதான் எனத் தெரிவித்தார்.