தவெக முன்னாள் நிர்வாகியான பூபாலனின் இல்லத்தில் இருந்து 135 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, அவரையும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டநிலையில், தமிழ்நாட்டில் ஒரு பெரிய போதைப்பொருள் பறிமுதல் பற்றிய சர்ச்சையை எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில் காட்டமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள, 137 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பூபாலன் தவெக-வில் இருந்து நீக்கப்பட்டதோடு, நான்கு பேர் சனிக்கிழமை மாலை (அக் 17) நீதிமன்றக் காவலில் வைக்கட்டுள்ளனர். மேலும், நடுக்கடல் வழியே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போதை பொருட்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்தது. மேலும், சமீபத்திய ஆண்டுகளில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பொறுத்தவரை பல அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பினையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். தற்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், "தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்று வரை தமிழக முதல்வர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்?.
18.10.2026 அன்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “one of the biggest narcotics seizures in Tamil Nadu’s coastal region in recent years” என்று கூறியுள்ளது. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா தமிழக முதலமைச்சரே?.
இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் Network-ஆக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதல்வராக, Atleast ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த Walter White Behaviour குறித்து திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டசபையில் எதிர்கட்சி பேசும் போது எப்படி இருப்பாரோ, அதேபோல் மவுன சாமியாராகவே இருக்கிறார்.
கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான Pseudoephederine என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவெக நிர்வாகி பூபாலன் வழக்கிலோ, Fully processed Meth Crystal-களே, அதுவும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது. ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய International Drug Mafia நடந்திருக்கும் போது, யாருக்காக Anti Drug Marathon ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர் ?.
இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம். அப்படியென்றால், இந்த போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்து விடுமா?
முதலமைச்சர் அவர்களே, For Your Information, இந்த போதைப்பொருளைக் கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் DRI அமைப்பு தான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும். மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இது பற்றி ஒரு விளக்கமாவது வருமா?" என்று சரமாரி கேள்விகளால் துளைத்தது மட்டுமின்றி காட்டமாக விமர்சித்தும் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.