கடற்கரையில மீன் விற்க கூடாது, ஆனா கடலுக்குள்ள பேனா வைக்கலாமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நொச்சிகுப்பம் சாலையில் உள்ள மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலையின் நடுவில் ஐஸ் பெட்டிகள், மரக்கட்டைகள், நண்டுகளை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சீமான் கலந்துகொண்டு, மீனவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமாதிக்கட்ட அரசு காட்டும் வேகத்தை மீன் சந்தை கட்டுவதற்கு ஏன் வேகம் காட்டவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : ’போர் தொழில்’ மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாக களமிறங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்...!
மேலும், நீதிபதி இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இது தான் இந்த மக்களின் நீண்ட கால வாழ்வாதாரம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மீனவர்கள் கடற்கரையில் மீன் விற்க கூடாது ஆனால் நீங்கள் கடலுக்குள் பேனா வைக்கலாமா என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.