தமிழ்நாடு

2டிஜி மருந்து ஏன் விற்பனைக்கு வரவில்லை.. பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

2டிஜி மருந்து ஏன் விற்பனைக்கு வரவில்லை பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Malaimurasu Seithigal TV
டி.ஆர்.டி.ஓ கண்டுபிடித்துள்ள மருந்தை விற்பனைக்கு அனுமதித்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் என உயர்நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது சற்றே அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டிருந்தாலும் 3ஆம் அலை தாக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிராக 2டிஜி என்னும் பவுடர் வடிவிலான மருந்தை கண்டுபிடித்தது.  ஆனால் இன்றுவரை அந்த மருந்து சந்தைக்கு வரவில்லை. 
இந்நிலையில் சரவணம் என்பவர், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து, மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், சந்தைக்கு வரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த போதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், டி.ஆர்.டி.ஓ கண்டுபிடித்துள்ள மருந்தை விற்பனை செய்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் என கருத்து தெரிவித்து, நாளைக்குள் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.