தமிழ்நாடு

10 நாட்களாக பரவலாக கனமழை... சோலையார் அணை நீர் மட்டம் அதிகரிப்பு ...

உதகை மற்றும் வால்பாறையில் தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Malaimurasu Seithigal TV
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம்  வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளமலை டனல், இறைச்சிப்பாறை, சின்னக்கல்லார் போன்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அக்காமலை, கருமலை, சின்னக்கல்லார் உள்ளிட்ட ஆறுகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வால்பாறை அடுத்த சோலையார் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
இதே போல் நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், உதகை அடுத்த குருத்துகுளி நீரோடையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.  
இந்நிலையில் நீரோடை வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால், காய்கறி தோட்டத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதில் பல ஏக்கர் காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. மேலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.