தமிழ்நாடு

குட்டிகளை தோளில் சுமந்து தாய் கரடி சாலையில் உலா... பொதுமக்கள் அச்சம்!!

Malaimurasu Seithigal TV

கோத்தகிரியில் இரவு நேரங்களில் சாலையில் இரண்டு குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் சுற்றித்திரிவது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. 

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில், கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில்  குட்டியுடன் கரடி உலா வருகிறது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துச் சென்றுள்ளனர். 

இந்த கரடிகள் கிராம பொதுமக்கள் யாரையாவது தாக்கும் முன்பு, வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளை சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.