தமிழ்நாடு

தொடர் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்- சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்ட கிராம மக்கள்

கொடைக்கானலில் தொடர் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த  தொழிலாளர்களை கிராம மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் மீட்டனர்.  

Malaimurasu Seithigal TV

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இன்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக கொடைக்கானல் பழனி செல்லக்கூடிய பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இந்த காட்டாற்று வெள்ளத்தில் கொடைக்கானல் பேத்துப்பாறை அடுத்த வயல் பகுதியில் விவசாய பணிகளுக்கு சென்ற சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.இதனால் அவர்கள் வீடு திரும்ப முடியாமல் பல மணி நேரம் தவித்தனர்

இதை அறிந்த  கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களை கயிறு கட்டி மிகவும் ஆபத்தான முறையில் மீட்டனர். இந்த பகுதியில்  அடிக்கடி காட்டாற்று  வெள்ளம் ஏற்படுவதால்  இதற்கு உரிய  தீர்வு  காண அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.