தமிழ்நாடு

ஓபிஎஸ் வழக்கு... இன்று தீர்ப்பு வழங்கப்படுமா?!!

Malaimurasu Seithigal TV

அதிமுக பொதுச்செயலாளா் தோ்தல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பில்  தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளா் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இருதரப்பு வாதங்களும் கடந்த 22-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என கடந்த 28-ம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.  இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.  அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.  இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.  கடந்த இருமுறாஇ ஒத்தி வைக்கப்பட்ட வழக்கில் இன்றாவது தீர்ப்பு வழங்கப்படுமா என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் தற்போது மாறியுள்ளது.