தமிழ்நாடு

எதிர்க்கட்சியால்  மட்டும் தான் ஓமிக்ரான் பரவுமா..? டி.டி.வி. தினகரன் கேள்வி...

எதிர்க்கட்சியினர் ஒன்று கூடினால் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என யாராவது தி.மு.க. அரசு சொன்னார்களா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Malaimurasu Seithigal TV

எம்.ஜி.ஆர்  நினைவுதினத்தையொட்டி கடிந்த டிசம்பர் 24 அன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நிறைய பேர் ஒன்று கூடக் கூடாது என தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் கோவையில் நேற்று முன் தினம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் கூட்டம் சேர்ந்தால் ஓமிக்ரான் பரவும் என அரசு சொன்னதே இப்போது மட்டும் பரவாதா என கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?

எதிர்க்கட்சியினர் ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.