தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? விளக்கம் கேட்டு அரசாணை வெளியீடு!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவான அறிக்கை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின்படி, ஓய்வு பெற்ற அர்சு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கிடைக்காது, அத்துடன், அரசின் உத்தரவாதமும் கிடைக்காது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பக் கோரி அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ”புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்களின் தகவல்கள், நீதிமன்ற வழக்கு உள்ளிட்டவை குறித்து அரசு இறுதி முடிவெடுக்கும்” என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 2004-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.