தமிழ்நாடு

அம்பை அருகே டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி முற்றுகையிட்ட பெண்கள்..!

Malaimurasu Seithigal TV

நெல்லை மாவட்டம் அம்பை ஆர்.டி.. அலுவலகம் அருகே சுமார் 500 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், சிறைத்துறை காவலர்கள் குடியிருப்பு, வணிகவரித்துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வீட்டில் டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது.

 இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் குடியிருப்பு பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட  கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். மேலும் கடந்த மாதம் அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், அப்போது டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தொடர்ந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் டாஸ்மாக் கடையை உடனடியாக மாற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு  முற்றுகையிட்டனர்இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் தலைமையிலான போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.