sexual harrasment in thoothukudi  
தமிழ்நாடு

“பட்டப்பகலில் காட்டுக்குள் தூக்கிச்சென்று..” வேலைக்குப்போன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு!!

இதில் அந்தப் பெண் கூச்சலிட அருகில் தோட்டங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள்...

மாலை முரசு செய்தி குழு

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் கிராமத்தைச் சேர்ந்த  45 வயது மதிக்கத்தக்க பெண்ணை  காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 2 -ஆம் தேதி கோவையில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் அது ஓய்வதற்குள்ளாகவே தூத்துக்குடியில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமைசம்பவம் நிகழ்ந்திருப்பது, நாட்டின் மனசாட்சியை கேள்விக்குள்ளாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தெய்வ செயல்புரம் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்  நேற்று முன் தினம் பிற்பகல் தனது தோட்டத்திற்கு களை எடுப்பதற்காக வேலைக்கு சென்று விட்டு, மீண்டும்  தனியாக திரும்பி வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். 

அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனியாக நடந்து வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக  தூக்கிச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தப் பெண் கூச்சலிட அருகில் தோட்டங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டதுடன் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை  பிடித்துள்ளனர்.

 இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்க தவறிய காவல்துறை மற்றும் திமுக அரசை கண்டித்தும் மற்றும்  கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி முருகனை ஜாமினில் வெளிவர முடியாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்  மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் மற்றும் தெய்வச் செயல் புரம் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.