தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் உலக கோப்பை போட்டி ஒளிபரப்பு!

Malaimurasu Seithigal TV

சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 3 சக்கர வாகன இணைப்பு சேவையை துவக்கி வைத்த, மெட்ரோ ரயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, மெட்ரோ ரயில் நிலையங்களில் உலக கோப்பை போட்டி ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் , எம்.ஆட்டோ பிரைடு  நிறவனத்துடன் இணைந்து மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை  அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இந்த வாகன சேவையானது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்  நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பின்னர் நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை  சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

இந்த ஆட்டோ சேவையையானது மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு  சேவை நடைமுறையில் இருக்கும் மெட்ரோ நிலையத்தில் இருந்து, 10 கிலோ மீட்டர் வரை இயக்கப்படுகிறது. ஒரு கிலோமீட்டருக்கு 20 ரூபாய் என்ற கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது. திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது 5 மின் இயங்கி மூன்று சக்கர வாகனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் இணைப்பு சிற்றுந்து இரண்டையும் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.இந்த சிற்றுந்து திருமங்கலம் மெட்ரோவில் இருந்து கொரட்டூர் வழியாக வாட்டர் கெனால் ரோடு வரை செல்கிறது. செனாய் நகரில் இருந்து தியாகராயர் நகர் வரை சென்ற சிற்றுந்து மக்கள் பயன்பாட்டில் பெரிதளவில் இல்லாத காரணத்தினால் தற்போது அந்த இரண்டு சிற்றுந்துகளையும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கொரட்டூர் வரை இணைக்கும் பேருந்தாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய CMRL இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, வரும் உலக கோப்பை போட்டியை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒளிபரப்ப மெட்ரோ நிர்வாகம் தயாராக உள்ளது. உலக கோப்பை கிரிகெட் போட்டியை நடத்துபவர்கள் கேட்டுகொண்டால் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலக கோப்பை கிரிகெட் போட்டியை நிச்சயம் ஒளிபரப்புவோம் என தெரிவிதுள்ளார்.