தமிழ்நாடு

உலக பூமி தினம்: 800 மரங்கள் நட்டு சாதனை படைத்த பெண்!!!!

Malaimurasu Seithigal TV

உலக பூமி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகள் மற்றும் மண்டலங்களில் உள்ள பூங்காகளிலும் தொண்டு நிறுவனம் மூலம் மரக்கன்று நடும் புதிய முயற்சி.பாட்டில்களில் தண்ணீர் வாங்குவாங்கர்களா என நம்பி இருந்த நானே இன்று கேஷ் கேஷாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகி உள்ளது - AR ரீஹனா

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி லிவிங்டன் கல்லூரியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ngo மற்றும் சுகம் நல அறக்கட்டளை இணைந்து நடத்திய Tree year நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் AR ரகுமானின் சகோதரி Ar ரீஹனா, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


சென்னை மாநகராட்சியை பசுமையாக்கும் வகையில் அனைத்து வார்டுகள் மற்றும் மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் மரங்களை நடுவதாகவும், 1 மில்லியன் மரக்கன்றுகள் நடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அதன் தொடக்கமாக 50 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.


AR ரீஹனா மேடை பேச்சு

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.எங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை உபசரிப்பதை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.சென்னையில் மட்டும் மரம் நடுவது நம் குறிக்கோளாக இல்லாமல் உலகம் முழுவதும் நட வேண்டும்.பாட்டில்களில் தண்ணீர் வாங்குவாங்கர்களா என நம்பி இருந்த நானே இன்று கேஷ் கேஷாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகி உள்ளது.பீமா பம்போ எனும் என் தோட்டத்தில் 800 மரங்கள் நட்டு உள்ளேன் என தெரிவித்தார்