தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவித்துள்ளார்.  

Malaimurasu Seithigal TV

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 26-ம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணபிக்கலாம் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் https://t.co/0DGRgqvVX9 & https://t.co/aPW3PbWYE1 என்ற இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவித்துள்ளார்.