தமிழ்நாடு

”சொந்த வீட்டை போல இந்த வீட்டையும் பராமரிக்க வேண்டும்" - உதயநிதி

Tamil Selvi Selvakumar

மகளிருக்கான பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நால்வர் நெடுஞ்செழியன் நகர் திட்டப்பகுதியில் 450 புதிய குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

அப்போது சொந்த வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ அதுபோல தாங்கள் கட்டிக் கொடுக்கும் இந்த வீடுகளையும் பராமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

House wife என்று இருந்த மகளிரை House Owner ஆக திராவிட மாடல் அரசு மாற்றி இருக்கிறது என உதயநிதி பெருமிதம் தெரிவித்தார்.