பப்ஜி, பிரீ ஃபயர் உள்ளிட்ட இணையதள விளையாட்டில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களுக்கு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட உண்மையான விளையாட்டுகளை சேர்ந்து விளையாடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
நாள் முழுவதும் இணையதள விளையாட்டுகளில் கவனத்தை செலுத்தும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.