தமிழ்நாடு

கோரிக்கையை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்...களத்தில் இறங்கிய இளைஞர்கள்...!

Tamil Selvi Selvakumar

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகத்தடை குறித்து எச்சரிக்கைப் பலகை வைத்த இளைஞர்கள் ஊர்ப்பெயர்களை வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் இருந்து மறவாமதுரைக்கு செல்லும் சாலையில் உள்ள வேகத் தடையால் இரு சக்கரவாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கினர்.

இதனால், அப்பகுதி மக்கள் சாலையில் எச்சரிக்கை பலகையையும், நிற கோடுகள் இடவும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால், நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்காததால் இனி அதிகாரிகளை நம்பி புண்ணியம் இல்லை என்ற உணர்ந்த இளைஞர்கள் தாங்களே முன்வந்து வேகத்தடை எச்சரிக்கை பலகை வைத்ததோடு வேகத்தடைக்கும் வெள்ளை நிற கோடுகள் இட்டனர்.

மேலும் அம்மன்குறிச்சியில் இருந்து சொக்கநாதபட்டி பிரிவு சாலை மற்றும் சொக்கநாதபட்டி ஊர் நுழையும் முன்பு ஊரின் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதாவது அரசு அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா?என்பது கேள்விகுறியாகவே இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.