தமிழ்நாடு

அலேக்காக பொருட்களை அள்ளிச் செல்லும் இளைஞர்கள்...சிசிடிவியில் சிக்கிய சம்பவம்...!

சென்னை அடுத்த உள்ளகரத்தில் உள்ள ஒரு கடையின் பூட்டை கடப்பாரையால் உடைத்து சிக்ரெட், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை அடுத்த உள்ளகரத்தில் உள்ள ஒரு கடையின் பூட்டை கடப்பாரையால் உடைத்து  சிக்ரெட், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (48). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுள்ளது. பின்னர் கடைக்குள் சென்று பார்த்த போது பணம் மற்றும் சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.  

கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் கடப்பாரை கொண்டு பூட்டை உடைத்து கடையில் இருந்த சிக்ரெட்டுகள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மூட்டை கட்டி கொண்டு செல்வது தெரியவந்தது. இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.