தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு....! தவறி விழுந்ததில் ஏற்பட்ட சோகம்...!

பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கியதால் இளைஞர் பரிதமாக உயிர் இழந்தார்...!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தில் அண்ணாமலை என்பவரது மகன் சிவராஜ் (18).  சென்னையைச் சேர்ந்த இவர் பெற்றோர் இல்லாததால் உறவினரான மாமா வீட்டில் தங்கி மளிகை கடையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், வேலைக்கு செல்வதற்காக வீட்டின் பின்புறம் சென்ற அவர், கால் தடுமாறி கீழே விழுந்ததில், எதிர்பாராமல் மின்சார கம்பியை பிடித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதிமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


 மேலும் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய வீட்டை இடித்து  புதிய வீடு கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.