உலக அளவில் செஸ்போட்டியை நடத்திய போது, அதற்கு பக்கபலமாக செயல்பட்டவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு அணி சார்பில் பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கைப்பந்து, இறகுபந்து, கிரிக்கெட், சதுரங்கபோட்டி, நீச்சல்போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், முதலமைச்சரிடம் யார் விளையாட நினைத்தாலும் அதில் வெற்றி பெறக்கூடிய தலைவர் யார் என்றால் அது தமிழ்நாட்டு முதலமைச்சர் தான் என்று கூறியவர், இந்த திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் அனைத்தையும் செய்துவருகிறார்.
அதேபோல் விளையாட்டு துறையிலும் திராவிட முன்னேற்றத்தின் பங்கு இருக்கிறது, அதற்கு முக்கிய காரணம் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தான். உலக அளவில் செஸ் போட்டியை நடத்திய போது அதற்கு பக்கபலமாக செயல்பட்டவர் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் என்றூ பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகதரத்தில் அலைச்சறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளதாகவும், பல வெளிநாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழ்நாட்டு இளைஞர்கள் கலந்து கொண்டு கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.