இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, அவர்களுக்கு பயிற்சி அளித்திடும் வகையில், அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று இளைஞர் திறன் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைச் சான்றிதழ்களையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
மேலும், இளைஞர்களுக்கு திறன் குறித்த ஆலோசனைகளை வழங்க கலந்தாய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் துறைகளில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், பயிற்சி பிரிவுகள், வேலை வாய்ப்புகள் போன்ற தகவல்கள் குறித்து தொழில் துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கமளிக்க உள்ளனர்.