தமிழ்நாடு

இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் யூ டூ புரூட்டஸ் என்ற யுடியூப் சேனலை முடக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் புகார் !

Tamil Selvi Selvakumar

இந்து தெய்வமான சிவபெருமானை இழிவுபடுத்திய யூ டூ புரூட்டஸ் என்ற யுடியூப் சேனலை முடக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், யூ டூ புரூட்டஸ் என்ற யுடியூப் சேனலில் தொடர்ந்து இந்து மத கடவுளை இழிவுப்படுத்தும் நோக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.

சமீபத்தில் நடராஜ சிவ பெருமானின் நடனம் குறித்து மிகவும் ஆபாசமாக பேசி இருப்பதாக கூறிய அவர், கந்தசஷ்டி கவசத்தை அவமதித்தது போல தற்போது சிவபெருமானை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டினார்.