தேர்தல் நேரத்தில் திமுகவிடம் கூடுதல் இடம் கேட்டு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது.
ஒருபுறம் அதிமுக பாஜக கூட்டணியை வெற்றி பெறக் கூடாது என்பதற்காக திமுக தேர்தல் வேலையை மேற்கொண்டு வருகிறது, மறுபுறம் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் கூடுதலாக இடங்கள் பெற்று தங்கள் கட்சியின் பலத்தையும், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் செயல்பட்டு வருகின்றன. இது திமுகவிற்கு தேர்தல் நேரத்தில் கூடுதல் நெருக்கடியை கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, திமுக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தான் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட காட்சிகள் கடந்த முறை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த முறை கூடுதலாக இடங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்கள் ஒரு சில வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்றால் அதற்கு மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி வரவில்லாதது மட்டுமே தான் காரணம் என்றும் திமுக தெரிவித்து வருகிறது. ஏற்கனவே சில காலமாக திமுக -விற்கு எதிரான கருத்துக்களையே கூறிவருகிறது சி.பி.எம். இந்த நிலையில் சண்முகம் அவர்கள் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
“2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைந்தால் தேர்தல் களம் கடும் போட்டியாக மாறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை அதிக தொகுதிகளை கோரும் என தெரிவித்துள்ள சண்முகம் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு மாநில முதலாளித்துவக் கட்சியாக திமுகவை சிபிஎம் கருதுகிறது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்திலிருந்தே இந்தக் கருத்தை சிபிஎம் கொண்டுள்ளோம். திமுகவின் முக்கிய குணம் மாறவில்லை.
திராவிட மாடல் அனைவரையும் உள்ளடக்கியது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிவருவதாகவும் ஆனால் அது நிறைவேறிவிட்டதா? என்ற கேள்வியை சண்முகம் எழுப்பியுள்ளார். மேலும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில்தான் திமுக வும் சிபிஎம் -ம் ஒன்றிணைகிறது என்றார்.
சிவகங்கை லாக் அப் மரணம் குறித்தான கேள்விக்கு ... திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு 24 என் கவுண்டர் நடந்துள்ளதாகவும். தேர்தல் நேரத்தில் திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் மனித உரிமை மீறல்களை சிபிஎம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” என்றும் பேசியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் நடைபெறும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள், கூட்டணி அகதிகளின் அதிருப்தி என இது திமுக -வுக்கு மிகவும் நெருக்கடியான காலமாக மாறி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.