உலகம்

ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு.....

Malaimurasu Seithigal TV

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 பேர் பலியான நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தொடர்ந்து கிவ் நகரின் மக்கள் வசிக்கும் பகுதியில் ரஷ்யா திடீரென ஏவுகணைத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதோடு பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன. 

தொடர்ந்து இந்நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளது.

-நப்பசலையார்