உலகம்

சிறுநீரக உறுப்பிலிருந்து நோயாளி ஒருவருக்கு அகற்றப்பட்ட 156 கற்கள்!

ஹைதரபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கர்நாடகாவை சேர்ந்த 50 வயது ஆசிரியர்.

Malaimurasu Seithigal TV

ஹைதராபாத் ப்ரீத்தி சிறுநீரக மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கர்நாடகா மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான பசவராஜ் மடிவாலரின் சிறுநீரக உறுப்பிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 156 கற்களை அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் நோயாளி கடும் வயிற்று வலியோடு வந்ததாகவும் அவரை பரிசோதித்ததில் சிறுநீரகத்தில் கற்கள் கொத்து கொத்தாக இருப்பதும் தெரிய வந்ததாக கூறினர்.


அவருக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த கற்கல் உருவாகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனை பற்றி நோயாளிடம் விசாரித்த போது அவர் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அவரது உடல்நிலையை மதிப்பாய்வு செய்த பிறகு, பெரிய அறுவை சிகிச்சைக்கு பதிலாக, கற்களைப் பிரித்தெடுக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் எண்டோஸ்கோபி வழியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திட்டமிடல் மற்றும் முறையான தயாரிப்புடன், மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் கற்கள் முழுமையாக பிரித்தெடுக்கப் பட்டதாகவும் நோயாளி தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார், மேலும் அவர் தினசரி வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்" என கூறியுள்ளனர்