உலகம்

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 17 பேர் உயிரிழப்பு

malaimurasu.com

ஆப்கானிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் கின்ஜான் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 17 பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் 34 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.