உலகம்

கிரீஸ் கடலில் கிடந்த 23.5 டன் குப்பைகள் அகற்றம்!!

Suaif Arsath

கிரீஸ் நாட்டின் கடல் பகுதியில் இருந்து சுமார் 23.5 டன் குப்பைகளை சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு அகற்றி சாதனை புரிந்துள்ளது.

உலக பெருங்கடல் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கடல் மாசுப்படாமல் தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மீனவர்களின் ஒத்துழைப்புடன் கடலினுள் கிடந்த 23 புள்ளி 5 டன் குப்பைகளை அகற்றியுள்ளது. இதில் மீன் வலை, மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமான இருந்ததாக கூறப்படுகிறது.