உலகம்

புது விதமா இருக்கே... இப்படியெல்லாம் ஒரு விழிப்புணர்வா?

விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்கரையில் நிர்வாணமாக திரண்டு நின்ற மக்களால சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

சிட்னி | ஆஸ்திரேலியவில் தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக கடற்கரையில் 2,500 பேர் நிர்வாணமாக திரண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் கூறுகிறது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய மக்கள் வழக்கமான தோல் பரிசோதனைகளை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்த நாட்டின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் வழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.