உலகம்

கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்... மனைவிக்காக காதல் சின்னம்

Malaimurasu Seithigal TV

போஸ்னியாவை சேர்ந்த 72 வயது முதியவர் , தனது மனைவிக்காக சுழலும் வீடு ஒன்றை வடிவமைத்துள்ளார்.  

கட்டுமானத்துறையில் எவ்வித அனுபவமும் இல்லாத வோஜின் குசிக் என்ற முதியவர், இந்த  வீட்டினை கட்டியுள்ளார்.

இவரது மனைவியான ஜூபிகா அடிக்கடி வீட்டின் அழகை மாற்ற விரும்பக்கூடியவர் எனவும், ஜன்னல் வழியாக வெவ்வேறு கோணங்களில் பார்த்து வீட்டின் சுற்றுப்புற அழகை ரசிக்க கூடியவர் என கூறப்படுகிறது. மனைவியின் ஆசைக்கு இணங்க வோஜின் அடிக்கடி வீட்டின் தோற்றத்தை மாற்றியுள்ளார்.