உலகம்

மின்கம்ப ஒயர்களுக்கு இடையே சிக்கிய கரடி ..

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவில் மின்கம்ப ஒயர்களுக்கு இடையே கரடி ஒன்று மாட்டிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அங்குள்ள அரிசோனா மாநிலத்தில் உள்ள மின்கம்பம் ஒன்றில், அண்மையில் கரடி ஒன்று ஏறியது.

பின்னர் மேல்புறத்தை அடைந்த கரடி மின்ஒயர்களுக்கு இடையே சிக்கி செய்வதறியாது தவித்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், கரடி மின்தாக்கி உயிரிழக்க கூடும் என்ற அச்சத்தில் உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு மின்இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. மேலும், கரடி தானே கீழே இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பயனாக சில நிமிட போராட்டத்துக்கு பின் கரடி தானாக கீழே இறங்கியது.